தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் துவங்கப்படுள்ளதால் இந்த தினம் மறக்க முடியாத தினமாக அமைந்துவிட்டதாக கனிமொழி Mp நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தினை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக எம்.பி கனிமொழி கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏடிஎம் அடையாள அட்டடைகளை வழங்கினார்.
திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், மற்றும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளை சேர்ந்த 1000 பயனாளுக்கு மகளிர் உரிமைத்திட்ட தொகை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி. தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தினால் இந்தநாள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு மறக்கமுடியாத நாளாக அமைந்துவிட்டதாக நெகிழ்ச்சி பட பேசினார். இந்நிகழ்ச்சியில்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: நீங்களே அர்ச்சகர் வேலைய விட்டு வேற வேலைக்கு போயிட்டிங்க… அப்போ ஏன் குழத்தொழில் திட்டம்..? கேள்விகளால் திணறடித்த பி.டி.ஆர்..!