நயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்?

மஹா சிவராத்திரி தினத்தன்று ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் நயன்தாராவை ஆட வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவைப் போன்று ஜக்கி வாசுதேசும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மஹா சிவராத்திரி தினத்தன்று அவரது ஈஷா யோகா மையத்தில் கூட்டத்தை கூட்டி விழா நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். ‘பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்த பழங்குடியினர் நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்து, அதில் தனது ஈஷா மையத்தை நடத்தி வருகிறார்.

மேலும், சிவராத்திரி தியானம் என்ற பெயரில் அளவுக்கதிகமான ஒளி, ஒலியை எழுப்பி, வனவிலங்குகளைத் துன்புறுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இதுபோக சிவராத்திரி அன்று நடிகைகளை ஆட வைத்து அதன் மூலம் பணம் பறிப்பதையும் ஜக்கி வாசுதேவ் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏற்கெனவே ஒருமுறை நடிகை தமன்னாவும் காஜல் அகர்வாலும் ஆடியுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் நடிகை நயன்தாராவை ஆட அழைத்தாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஜக்கி வாசுதேவ் கும்பல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஆட வரமுடியாது என்று கூறிய நயன்தாராவிடம், “நாங்க யார்ன்னு தெரியுமா? நாங்க கூப்பிட்டும் வரமாட்டேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? பார்த்துக்கலாம்” என்று மிரட்டியுள்ளனர். ஆனாலும் இதற்கு நயன் அடிபணிந்ததாக தெரியவில்லை.

இதையடுத்து, ஜக்கி வாசுதேவ் கும்பல் நிக்கி கல்ராணியை புக் செய்து சிவராத்திரி தினத்தன்று ஆட வைத்துள்ளனர். நடிகைகளுடன் ஜக்கி ஆடுவதை பார்ப்பதற்கு வரும் கூட்டத்தினரிடம் விதவிதமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேடைக்கு அருகில் இருக்கும் முதல் வரிசையான கங்கா கேலரிக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாவதாக உள்ள யமுனா கேலரிக்கு ரூ.20 ஆயிரமும், அடுத்துள்ள நர்மதா கேலரிக்கு ரூ.5 ஆயிரமும், கோதாவரி கேலரிக்கு ரூ.1,000, இறுதியாக உள்ள கேலரிக்கு ரூ.500ம் வசூல் செய்யப்படுகிறது.

What do you think?

டெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

சர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்!