கூட்டகூட்டமாக கரை ஒதுங்கிய ஜிலேபி மீன்கள்.. ஆச்சரியத்தில் மீனவர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மீனவர்கள் வங்காள விரிகுடா பகுதியில் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது மீன்பிடிப்பதற்காக கடலில் வீசப்பட்ட வலையில் எக்கச்சக்கமான ஜிலேபி மீன்கள் சிக்கி இருப்பதைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர வாழ்வுத்துறை பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் என்பவர் தலைமையில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் கடல் பாக் ஜெலசந்தி பகுதியில் ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்கள் தற்போது கடல் தண்ணீரில் இனப்பெருக்கம் செய்து உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. தன்னை சுற்றி உள்ள உப்பு நீர் பகுதிக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் தங்களை மாற்றிக் கொண்டு பழகி கடலில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஜிலேபி மீன்களை கடலில் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருவதால் அவை உண்ணக்கூடிய கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வைகை ஆற்றில் இருந்து ஜிலேபி மீன்கள் கடலில் கலந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்