வெளியானது ஜாமியா மாணவர்களை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் புகுந்து மாணவர்களை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு மாதங்களாக நடந்து வரும் இப்போராட்டத்தில் டெல்லி ஜாமியா மிலியா, அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிஏஏ போராட்டத்திற்கு பின்னர் ஜாமியா பல்கலைக் கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, காவல் துறையினர் கொடூரமாக தாக்குதல் நடத்துவது பதிவாகியுள்ளது. நூலகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களையும் மாணவிகளையும் போலீசார் தங்களது லத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்குகின்றனர். இந்த தாக்குதலுக்கு பயந்து அங்கிருக்கும் மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடுகின்றனர். 40 வினாடிகள் ஓடும் இந்த சிசிடிவி காட்சிகளை தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா, ‘டெல்லி காவல் துறையும், அமித்ஷாவும் ஜாமியா நூலகத்திற்குள் போலீசார் நுழையவில்லை என்றும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் பொய் கூறியிருந்தார்கள். இந்த வீடியோவை பார்த்த பிறகும், ஜாமியா மாணவர்களை தாக்கிய டெல்லி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசின் நோக்கம் அம்பலமாகிவ்டும்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

வீதிக்கு வாங்க ரஜினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஐபிஎல் 2020 : முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதல்