ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்..!! வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி..!!
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 7 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலானது ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவித்திருந்தார்.,
முதற்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் எனவும்., 2-ஆவது கட்டமாக செப்டம்பர் 25-ஆம் தேதியும், மூன்றாவது கட்டமாக அக்டோபர் ஒன்றாம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதேபோல, ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும், ஒரே கட்டமாக அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்திருந்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது என சொல்லலாம்., இப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான தேர்தல் வார் ரூம் தலைவர்களை நியமித்திருந்தது. அதாவது ஜம்மு காஷ்மீரின் வார் ரூம் தலைவராக கோகுல் புட்டைல் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசிய வார் ரூம் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மீண்டும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட 40 நட்சத்திர பிரச்சார பேச்சாளர்கள் பட்டியலையும் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. இதனிடையே ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவா் குலாம் நபி ஆசாத், 13 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..