ஜம்முகாஷ்மீர் சட்டபேரவை தேர்தல்..!! பிரதமர் மோடி பிரச்சாரம்..!!
மேற்குவங்கம் மாநிலமான ஜம்மு காஷ்மீரில் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்த இருப்பதால் அறிவிப்பு வெளியானது.. 90 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலானது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது…
முதல் கட்ட தேர்தல் :
இந்த மாதம் 18ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட தேர்தல் :
செப்டம்பர் 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.. அதற்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரமானது அடுத்த வாரம் தொடங்கவுள்ளது..
மூன்றாம் கட்ட தேர்தல் :
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த மூன்று கட்ட வாக்குபதிவுகளும் முடிவடைந்த பின்னரே வாக்கு எண்ணிக்கையானது அடுத்த மாதம் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும் என தெரிவித்துள்ளது..
தொகுதி பங்கீடுகள் :
ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டானது ஆகஸ்ட் 26ம் தேதி நிறைவு பெற்றது.
அதன்படி, இந்தியா கூட்டணி சார்பில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.
இதுவரை ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயக கட்சி இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளது. அதே சமயம் பாஜக இந்த முறை கூட்டணியின்றி தனித்து போட்டியிடுகிறது..
ராகுல் காந்தி :
இதனால் ஜம்முகாஷ்மிரில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.. கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.. தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி செப்டம்பர் 4ம் தேதி இரண்டு இடங்களில் பிரசாரத்தை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி பிரச்சாரம் :
இந்நிலையில் பாஜக போட்டியிடவுள்ள 51 தொகுதிகளின் கட்சி வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டுள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமித்ஷா பிரச்சாரம் :
அதேபோல பிரதமர் மோடி 2 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். ஜம்மு பகுதியில் மோடியின் பிரசாரம் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி நம்புகிறது. பா.ஜ.க.வில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினமும், நேற்றும் ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் பிரசாரத்தை பலப்படுத்த பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..