ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்..! முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!!
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி இடையே தொகுதி பங்கீடு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலானது ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவித்திருந்தார்.,
முதற்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் எனவும்., 2-ஆவது கட்டமாக செப்டம்பர் 25-ஆம் தேதியும், மூன்றாவது கட்டமாக அக்டோபர் ஒன்றாம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ராஜீவ் குமார் அறிவித்தார்… அதேபோல, ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும், ஒரே கட்டமாக அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்திருந்தார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் என சொல்லப்படுகிறது., காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. அதில் 24 தொகுதிகளில் நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..