“அரசியல் கருவியாக மாறும் ஜாதிவாரி கணக்கெடுப்பு..” ஆர்எஸ்எஸ் சொன்ன கருத்து..!!
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளநிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவாரா..? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு அனுமதி அளிக்க ஆர்எஸ்எஸ் யார்..? என கேள்வி எழுப்பி உள்ளார்.. தேர்தல் ஆதாயத்துக்காக அந்தக் கணக்கெடுப்பு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று அந்த அமைப்பு கூறுவதன் அர்த்தம் என்ன? எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ன நீதிபதியா அல்லது நடுவரா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்..
தற்போது ஆர்எஸ்எஸ் பச்சைக்கொடி காட்டி விட்டதால், தங்கள் கட்சியின் மற்றொரு வாக்குறுதித் திட்டத்தை கடத்திச் சென்று, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவாரா? என்றும் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறோமா, எதிர்க்கிறோமா என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்..
நாட்டின் அரசியல்சாசனத்துக்கு பதிலாக மனு ஸ்மிருதியை ஆதரிக்கும் சங் பரிவார் அமைப்புகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரின் பங்களிப்பைப் பற்றி கவலைப்படுகின்றனவா? என்வும் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..