மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா…!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா அதிமுக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் 72 கிலோ எடையுள்ள கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினர்.  இதனையடுத்து, நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட எராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

What do you think?

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு …!என்ஐஏ அதிகாரிகள் சோதனை

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது …!