இரட்டை அர்த்தங்களை கூறி மாணவிகளிடம் பேசிய ஆசிரியர் கைது
தென்காசியில் இரட்டை அர்த்தங்களை கூறி மாணவிகளிடம் பேசிய ஆசிரியரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பண்பொழியில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயராஜ்.
இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், இரட்டை அர்த்தங்களை கூறி பேசுவதாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.