வாழ்க்கையில் முன்னேறனுமா..? அப்போ இதெல்லாம் தவிர்க்க வேண்டும்..!
கோபம்:
கோபம் தீமையான ஒன்றாகும். கோபமானது அவர்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்.
சோம்பல்:
நேரமானது மிகவும் முக்கியமானது. நேரத்தை கவனமாக செலவழிக்க வேண்டும். உங்களின் நேரத்தை தேவையற்றவற்றில் வீணடிக்காமல் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.
பொறாமை:
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதன் மூலம் பொறாமை ஆனது பிறக்கிறது. பொறாமை ஒருவரின் அமைதியை கெடுக்கும். மற்றவர்களுடையதை நீங்கள் அடைய விரும்புவது தவறானது. மாற்றாக கடந்த காலத்தை விட இன்று நீங்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள் என சிந்திக்க வேண்டும்.
வீண்பேச்சு:
மற்றவர்களை பற்றி தேவையில்லாமல் கிசுகிசு பேசுவதை நிறுத்த வேண்டும். இது மற்றவர்களிடம் உங்களை பற்றிய தவறான எண்ணத்தை உண்டாக்கும்.
கவலை:
உங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்கு வீண் கவலை கொள்வதை தவிர்க்க வேண்டும். மாற்றாக உங்களின் வாழ்க்கைக்கு முன்னேற்றமாக இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
சுயநலம்:
தேவையானவற்றை அடைய நேர்மை, திறமை, அறிவு, நிதானம், தைரியம் ஆகிய பண்புகள் அவசியமான ஒன்று தான். நாம் வாழும் சமூகத்திற்கு பயனுள்ள காரியங்களை செய்வது தேவையான ஒன்று ஆகும்.