காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஜெரோமியா ஆதரவு..!! செல்வபெருந்தகையுடன் சந்திப்பு..!!
வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளநிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 21ம் தேதி தொடங்கியது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் பல கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் கட்சியாக தொகுதி பங்கீட்டை முடிவு செய்து, முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தலுக்கு இந்திய கூட்டணி தயாராகியுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 25ம் தேதி காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தகை, “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் பேச உள்ளோம்.
அதற்கான கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அனைத்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவோம், ஒரு தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்தயவுள்ளோம் என தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இந்திய கிருஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜெரோமியா காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் திரு.அனுஷ்யா தலைமையில் இந்திய கிறிஸ்துவ முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் மற்றும் தலைவருமான பிஷப் திரு.எம். ஜெரோமிய சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகையை சந்தித்து இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கிருஸ்துவ முன்னேற்ற கழகத்தின் கீழ் அம்பேத்கர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, நீதிகட்சி மற்றும் கிருஸ்துவ பாதுகாப்பு நலச்சங்கம், உபகர் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து இந்திய கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..