“ஜார்கண்ட் சட்டப்பேரவை-சம்பாய் சோரன் அரசு வெற்றி”
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரான சம்பயி சோரன், மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஜார்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். மாநில சட்டப்பேரவையில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பயி சோரன் தலைமையிலான ஆட்சிக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.
இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.