வீட்டிலிருந்தபடியே வேலை செய்வோருக்காக ஜியோவின் அதிரடி Offer!

ஜியோ புதிதாக வீட்டிலிருந்தே வேலை செய்வோருக்கென தனியாக ஒரு ஆஃபரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என்றும் Work From Home எனப்படும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதியளித்துள்ளன.

இந்நிலையில் அவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்காக பிரத்தேயகமாக ஜியோ நிறுவனம் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.251க்கு ஜியோவில் ரீசார்ஜ் செய்தால் 51 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி வரை மொத்தம் 102 ஜிபி டேட்டா சேவை வழங்கப்படும். ஆனால் இந்த திட்டத்தின் மூலமாக போன் பேசவோ அல்லது மெசெஜ்கள் அனுப்பவோ முடியாது என்றும் இது முற்றிலும் டேட்டா தேவைக்கானது மட்டுமே என்றும் விளக்கமளித்துள்ளது.

What do you think?

நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் சீனா!