ADVERTISEMENT
கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் ராஜராஜன் கண் பரிசோதனை முகாமை துவக்கிவைத்தார்!!!!
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள, டிரினிட்டி கண் மருத்துவமனையில், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதனை, கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்கு சேவையாற்றும் விதமாக பல சேவைகளை செய்து வருகின்றது, இதன் ஒரு பகுதியாக இன்று நவம்பர் 14 – ம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கியுள்ளது.
அதிகாரிகள், மருத்துவர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.