கொரோனாவால் ஜோதிகாவுக்கு வந்த சோதனை!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இசைவெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பின்பு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அவர் தற்போது கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக தனது கணவரும், நடிகருமான சூர்யா தயாரிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடைப்பெறுவதாக இருந்தது.

Pon Magal Vanthal Poster

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டுள்ளது.

What do you think?

‘கொரோனா வைரஸ்’ முக. ஸ்டாலின் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

8,000 நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை !