மோடி, ஜோதிராதித்ய சிந்தியா இணைப்பிற்கு பாலமாக செயல்பட்டவர் இவரா?

மோடி மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா இணைப்பிற்கு பாலமாக செயல்பட்டவர் கெய்க்வாட் பரம்பரையை சேர்ந்த ஷுபாங்கிணி ராஜே என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா. மேலும் அவருடன் 17 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் காங்கிரசிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இந்த அதிரடி அரசியல் திருப்பங்களுக்கு பின்னணியில் குஜராத்தின் பரோடா ராஜகுடும்பத்தை சேர்ந்த ஷுபாங்கிணி ராஜே கெயிக்வாட் தான் உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அரசியல் ரீதியாக தொடர்பு ஏற்படுத்தும் பாலமாக இவர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கெயிக்வாட் ராஜகுடும்பத்தை சேர்ந்தவரான பிரியதர்ஷிணி என்பவரை தான் ஜோதிராதித்ய சிந்தியா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கெயிக்வாட் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினரான ஷுபாங்கிணி ராஜே மீது பிரதமர் மோடி மிகுந்த நட்பும் மரியாதையும் வைத்துள்ளார்.

மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வதோதரா தொகுதியில் மோடி போட்டியிட்டபோது ஷுபாங்கிணி ராஜே தான் அவரை முன்மொழிந்தார். இந்த சூழலில் மோடி மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா இருவரிடமும் நெருக்கமாக இருக்கும் ஷுபாங்கிணி ராஜே தான் இவ்விருவரின் இணைப்பிற்கு பாலமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

What do you think?

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இல்லை” – ரஜினி வழக்கு தள்ளுபடி

சுகாதாரத்துறை அமைச்சரையும் தாக்கிய கொரோனா வைரஸ்!