ஒருமுறை இந்த திருத்தலத்திற்கு சென்றால் போதும்..!! அனைத்து துன்பங்களும் விலகி விடும்..!!
* ஞாயிறு திருத்தலம், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில், செங்குன்றம் அருகில் உள்ள “புஷ்பரதேஸ்வரர்” கோவிலுக்கு சென்று சூரிய பகவானை வணங்கினால்.., சிறந்த பலன் கிடைக்கும்.
மேலும் சூரிய புஷ்கரணி. சூரியதசை, புத்தி, அந்தரங்கம் நடப்பவர்கள் இந்த தலத்திற்கு சென்று வழிபட்டால் சூரிய பகவானின் அருள் கிடைக்கும்..
* சென்னை, ராமாபுரம் அருகே கிருகம்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் ஓர் சூரிய நாராயணர் திருதலம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தலத்தில் ஈசனை சூரிய பகவான் வணங்கியிருக்கிறார். தொடர்ந்து ஆறு வாரம் ஈசனை வணங்கினால் தடைகள் நீங்கி விடும்.
* திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள பேரளத்திற்கு அருகே உள்ள திருமியச்சூர். சூரியனின் ஒளி நல்லவை கெட்டவை இரண்டிற்கும் உதவுவதால் நாம் செய்த பாவங்கள் விலகி விடும்..
* காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோவிலில் சூரியன் முருங்கை மர நிழலில் ஜோதிலிங்கமாய் அருள் பாலிக்கிறார். இங்கு சூரியன் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து தீர்த்தங்களை அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
* தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பரிதி நியமம். இந்த திருத்தலத்தில் ஈசன் பாஸ்கரேஸ்வரர் என்றும் பருத்தியப்பர் என்றும் வணங்கப்படுகிறார்.
மேற்கண்ட அனைத்து திருத்தலத்திற்கும் சூரியன் இவர்களை வழிபட்டதால் மட்டுமே இந்த திருத்தலங்களுக்கு மேற்கண்ட புனித பெயர்கள் வந்தது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..