‘ம.பி அரசியலில் அடுத்த அதிரடி திருப்பம்’ பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா!

நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகியது தான்.

அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்பு தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.

மேலும் அவருடன் 17 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் காங்கிரசிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

What do you think?

‘சீமானை தப்பிக்க விடமாட்டேன்’ கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார்!

‘ கல்லை தூக்கி போட்டு இளைஞர் கொலை’ நிர்வாண கோலத்தில் கிடந்த உடலால் மதுரவாயிலில் பரபரப்பு!