கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்த்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தற்போது வரை 202 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அனைத்து அமசங்களையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் புதிய திட்டத்தை கொண்டுவந்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.