கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவுப்படி கச்சிரபாளையம் காவல்நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டையில் சிறுகலூர் கிராமத்தில் மேற்கே ஓடையின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 08 பேரல்களில் சுமார் 1,600 லிட்டர் சாராய ஊரல்களை கண்டுபிடித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திலேயே காவல்நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.