குடிநீராக மாறிய கல்குவாரி நீர்..!! சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை போக்குமா..?
செங்கல்பட்டு அருகில் உள்ள புலிப்பாக்கம் ஊராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் 25 ஆண்டுகளாக கல்குவாரி இயங்கிவருகிறது. ஆனால் இந்த கல்குவாரி நீரில் 300 அடி ஆழம் இருப்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
வீணாக மூடப்பட்டு வைத்திருப்பதற்கு பதிலாக குடிநீராக மாற்றலாமே என்ற எண்ணத்தில், கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. எனவே தமிழக குடிநீர் வாரியம், மாநகராட்சி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், புலிப்பாக்கம் குட்டை நீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில் நீரை, குடிநீராக மாற்ற முடியும் என தெரியவந்தது. இந்த பரிசோதனைகள் முடிவை தமிழக அரசிற்கு அனுப்பிவைத்தனர், இருந்தும் காரணம் இன்றி இந்த சோதனை நிறுத்தப்பட்டது.
இருந்து முயற்சியை கைவிட தமிழக அரசு, மறைமலைமகர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் புலிப்பாக்கம் குவாரி நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்ற முடிவு செய்தனர்.
அந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், குவாரி நீரை குடிநீராக மாற்ற மீண்டும் மாநகரட்சி வேண்டுகோள் வைத்தனர்,மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த பகுதி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், அறிக்கையிட்டார்.
எனவே கல்குவாரியை சுற்றிலும் சுவர் எழுப்பி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து. குழாய் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீரை குடிநீராக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக 40 கோடி ரூபாய் நிதி கேட்டு , தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, புலிப்பாக்கம் கல்குவாரி நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் பணியை மறைமலை மாநகராட்சி அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. அரசு அனுமதி கொடுத்ததும் இந்த பணிகளை முழுவதுமாக முடித்துவிடுவோம்..
இந்த தண்ணீர் ஆனது மழைக்காலத்தில் சேமிக்கப் பட்டு கோடை காலத்தில் அனைவருக்கும் உதவும் விதமாக இருக்கும்.