கல்குவாரி வெடி விபத்து… இரண்டு பேர் பலி.. உரிமையாளாருக்கு போலீஸ் வலைவீச்சு..!
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட டி.என்.பாளையம் வன எல்லையில் ஆதிபெருமாள் கோயில் கரடு என்ற இடத்தில், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் அவரது மனைவி பெயரில் சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டு வந்தது.
2015ஆம் ஆண்டே உரிமம் முடிவடைந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த குவாரியில் 10 மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வெடி வைத்து பாறையை உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் அங்கிருந்த செந்தில் குமார் மற்றும் அஜித்குமார் என்ற தொழிலாளர்கள் இருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்ட மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோடியிள்ளனர்.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த பங்களாபுதூர் போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள உரிமையாளர் லோகநாதனையும் தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்