“பேராசிரியர் இழப்பு வேதனைக்குரியது” – கமல் இரங்கல் டிவிட்

திராவிட சிந்தனையின் தெளிவுரை ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அன்பழகன்

அதேபோல், நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது.
அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

‘Free Pass’ இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணியை விமர்சிக்கும் தெ. ஆ.கேப்டன்!

‘நடிகர் அஜித்தின் கையெழுத்துடன் FaceBook-ல் வெளியான அறிக்கை’ ரசிகர்கள் ஏமாற்றம்!