முதல்வரின் அறிவிப்பு உடல் உறுப்பு தானம் செய்ய குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்வோர்களுக்கு இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை பல தரப்பினரும் வரவேற்று வந்த நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (டிவிட்டர்) தள பதிவில்,
பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம். இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்.
பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.
இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்…
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2023