மத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்!

மத்திய பிரதேச முதல்வர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு மத்தியபிரதேச சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா அச்சத்தால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஜக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மார்ச் 20(இன்று) மாலை 5 மணிக்குள் கமல்நாத் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசு தோல்வியடையும் என்ற நிலையில்
முதல்வர் கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத், ” நாங்கள் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்வதற்காக மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கினர். தற்போது ஆட்சி 15 மாதங்களை மட்டுமே முடிந்துள்ளது. பாஜக எப்போதும் எனக்கு எதிராக சதி செய்துகொண்டே இருந்தது. எங்கள் 22 எம்எல்ஏக்களை அவர்கள் பெங்களூருவில் பிடித்து வைத்துள்ளனர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக சென்ற அவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இது எனக்கு எதிரான நம்பிக்கை மீறல் அல்ல, மக்களுக்கு எதிரானது. பாஜக மத்திய பிரதேச மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.

இத்தகைய சூழ்நிலையில் நான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்கிறேன். பிற்பகலில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளேன்” என்று அதிரடியாக அறிவித்தார்.

What do you think?

‘பிரதமரின் கோரிக்கை’ தமிழகத்தில் 1 லட்சம் ஹோட்டல்கள் அடைப்பு!

தளபதி 65 திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தின் 2ம் பாகமா?