“இந்தியாவின் கான குயில்.. சின்ன குயில் சித்ரா பிறந்தநாள்..”
இவங்க பெயரை சொன்ன போதும் எல்லாரும் கண்டுபுடுச்சிருவீங்க வேற யாரும் இல்லைங்க நம்ம பாடகி “சின்ன குயில் சித்ரா ” இவர பத்தி சொல்லணும்னா
இவர் பிறக்கும்போதே இசை குடும்பத்தில் பிறந்தவர் சிறுவதில் இருந்து இசையில் தனி கவனம் செலுத்தி கற்றுக்கொண்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடியவர்,
இவருக்கு திரைப்படங்களில் பாடகராக வேண்டும் என்றுலாம் ஆசை இல்லையாம் இவர் படிக்கும்பொழுது கே. ஜே.யேசுதாஸ் உடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது..
அந்த பாடல் திரைப்படத்தில் வெளிவருவதற்கு முன்பு வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து கே. ஜே.யேசுதாஸ் உடன் பல பாடல்கள் பாடினார்கள்..
தமிழில் மட்டும் அல்லாமல் பலவிதமான இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியவர், எண்ணற்ற விருதுகளுக்கு சொந்தக்காரியாக இருக்கும் நமது கே .எஸ் சித்ரா பாடலை கேட்டல் காதிற்குள் குயில் பாடுவதுபோல் இருக்கும்..
இவர் பாடிய காதல் பாடல்கள் நிறைய இருந்தாலும் தொண்ணுறுகளில் பாடப்பட்ட காதல் பாடல்கள் இன்றுவரை அனைவரும் விரும்பும் வகையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய மனதை பத்திரமாக வைத்து என் மாமானிடம் கொண்டு சேர்ப்பேன், மாமாவோட நெஞ்சில் நான் மட்டும் தான் இருக்கானு என்று கூறுகிறாள் நாலும் கிழமையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறான்.
இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல் .இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் “எஜமான் ” ரஜினி, மீனா இணைந்து நடித்த திரைப்படம் .
எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு..,
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே..
ஒரு கோவிலின் மாளிகைபோல் வீடு கட்டி வைத்திருக்கிறாய் அது யாருக்காக,என் தேவியை அழைத்து வந்து குடியேற்றுவதற்கு.
ஒரு பெரிய புயல்வந்தா அன்பே என்ன எப்படி பார்த்துக்கொள்ளுவாய் , என் இமைபோல் உன்னை பார்த்துக்கொள்ளுவேன் என்று கூறுகிறான்..
காதலன் மிகவும் ஆழமான காதல் வரிகள் என்று கூறலாம் இந்தப்பாடலே ஒரு இசை ஆக இருக்க இதற்க்கு இசையமைப்பாளர் எஸ். எ. ராஜ்குமார் இசை அமைக்க பாடகர் ஹாரிஹரன் மற்றும் பாடகி கே.எஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல் இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் “துள்ளாத மனமும் துள்ளும்”.. விஜய் மற்றும் சிம்ரன் நடித்த திரைப்படத்தில் வரும் பாடல் .
மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்..
அக்கா தங்கை இருவரும் சேர்ந்து பாடும் பாடல் அக்காவின் கணவன் எப்படி இருப்பான் என்று குறும்புக்கார தங்கை அக்காவிடம் கேட்பதுதான் இந்த பாடல்
கண்கள் மட்டும்தான் பேசுமா உன் காதல் கதையே கொஞ்சம் சொல்லுமா..? பக்கம் வந்து உனக்கு முத்தம் கொடுத்தானா இல்லை கண்களால் கதை பேசுவானா என்று கேட்கிறாள் தங்கை.
இசை அமைப்பாளர் தேவா இசையில் பாடகர்கள் அனுராதா ஸ்ரீ ராம் மற்றும் கே.எஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல் இது .இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் “நினைத்தேன் வந்தாய் “விஜய், தேவையானி, ரம்பா இணைந்து நடித்த படம் .
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
கண்கள் மட்டும் பேசுமா.., கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா..
தன் காதலை காதலனிடம் சொல்லமுடியாமல் தவிக்கும் காதலி பாடலாக அவளின் இதயத்தில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக வருவது தான் இந்த பாடல் “உன்னை சேராமல் என் இருவிழி இரண்டும் தூங்காமல் தவிக்கின்றது”.
இசையமைப்பாளர் சிவசங்கர் இசையில், பாடகர்கள் விவேகா மற்றும் கே.ஸ் சித்ரா இணைந்து பாடிய பாடல்… இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் காதல் சுகமானது, தருண்குமார் , சினேகா நடித்த திரைப்படம் .
அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
வெட்கங்கள் வர வைக்கிறாய்…
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
தனியே அழ வைக்கிறாய்…
நீ வருவாய் என பல நாட்கள் தவமிருந்து நான் காத்திருந்தேன் அப்போது என் வாழ்வில் தேவதையாக வந்தவள் நீ.. எனக்கென்று ஒரு காதல் அதை உன்னிடம் சொல்லிவிட்டேன்.. அந்த காதலை நீ ஏற்க மறுத்தாலும் காலமெல்லாம் உனக்காக நான் காத்திருப்பேன்..
பார்த்திபன், தேவையானி, நடிப்பில் வெளியான நீ வருவாய் என்ற படத்தில் வரும் இந்த பாடல் ஒரு பெண்ணின் மனதில் உள்ளதை சொல்லும் பாடல் என சொல்லலாம்.. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில்., பா.விஜய் வரிகளில் வந்தது தான் இந்த பாடல்..
பூக்கும் செடியை எல்லாம்
சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்…
எட்டு திசையும் சேர்த்து
ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம்
உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன்
உன்னிடும் உன்னிடும் என்னை தந்தேன்..
என் நிழலில் நீ நடக்க..
என் உயிரில் உன்னை வைத்தேன்..
அனைத்து 70ஸ் முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைவரையும் தன்னுடைய குரலால் ஈர்த்த சின்ன குயில் “சித்ரா” அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..