‘அன்பழகன் இறந்தபின்பும் கடிதம் கொண்டு வந்த தபால்காரர்’ கண்கலங்க வைத்த சம்பவம்!

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று இறந்த போதும் அவருக்கு தபால்காரர் கடிதங்கள் கொண்டு வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக தபால்காரர் சிதம்பரம் என்பவர் தான் பேராசிரியர் அன்பழகனுக்கு வரும் கடிதங்களை கொடுத்து வந்துள்ளார்.

இன்று காலை பணிக்கு வந்தபோது க. அன்பழகன் உயிரிழந்து செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தார் தபால்காரர் சிதம்பரம். இருப்பினும் இன்றும் அன்பழகனுக்கு வந்ததுள்ள கடிதங்களை எடுத்துக்கொண்டு ஒரு மாலையும் வாங்கிக்கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் அங்கு அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் கடைசியாக ஒருமுறை பேராசிரியரின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார் தபால்காரர் சிதம்பரம்.

கூட்டம் அதிகமாக இருந்ததாலும், தனது பணியை தொடரவேண்டிய சூழல் ஏற்பட்டதாலும் தபால்காரர் சிதம்பரம் தான் கொண்டு வந்த கடிதம் மற்றும் மாலையை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்துவிட்டு என் சார்பாக நீங்களே இதை அவருக்கு போட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டு வருத்ததுடன் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

What do you think?

‘பேராசிரியர் பெருந்தகையே எனக்கு பெரியப்பா’ ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதம்!

பெண்ணின் வாழ்க்கை துயரத்தை கேட்டு கண்கலங்கிய மோடி