கங்கனா ரனாவத் பதிவிக்கு வேட்டா..? நீதிபதி பிறப்பித்த உத்தரவு..! ஆகஸ்ட் 21..?
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றிருந்தார். அந்த வெற்றியை எதிர்த்து கின்னார் மாவட்டத்தை சேர்ந்த லயக் ராம் நெகி இம்மாச்சல பிரதேசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, தேர்தல் நடத்தும் அதிகாரி தனது வேட்பு மனுவை நிராகரித்து விட்டதாக லயக் ராம் நெகி தெரிவித்திருந்தார். மேலும், வனத்துறையின் முன்னாள் பணியாளராக பணியாற்றிய லயக் ராம் நெகி, முன்னதாகவே வேட்பு மனுக்களுடன், தன்னுடைய துறை சார்ந்த நிலுவைத் தொகை ஏதும் இல்லை என்ற சான்றிதழை சமர்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகிய துறைகளில் நிலுவை தொகை ஏதும் இல்லை என்கிற சான்றிதழை சமர்ப்பிக்கும் படி அதிகாரிகள் உத்தரவிட்டு ஒருநாள் அவகாசமும் வழங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அந்த ஆவணங்களை சமர்ப்பித்தபோது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்காமல் வேட்புமனுவை நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஆவணங்களை ஏற்று வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதித்து இருந்தால் கடந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றிருக்க முடியும்.., எனவே இந்த தேர்தலை ஒதுக்கி வைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ரேவால், அடுத்த மாதம் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் இந்த வழக்கிற்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் 5 லட்சத்து 37 ஆயிரத்து 2 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் வீரபத்திர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் 4 லட்சத்து 62 ஆயிரத்து 267 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். கங்கனா ரனாவத்துக்கும், விக்ரமாதித்ய சிங்குக்கும் இடையே 74 ஆயிரத்து 755 வாக்குகள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ