கங்குவா படத்திற்கு வந்த புது சிக்கல்..!! உயர்நீதிமன்றம் அதிரடி..!!
சூர்யாவின் கங்குவா படம் நவ. 7ஆம் தேதி வரை வெளியிடப்படாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், உருவாகியுள்ள படம் தான் “கங்குவா” ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது.
மிக பெரிய பட் ஜெட்டில் 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியீட படக்குழு முடிவு செய்திருந்தது…
இந்நிலையில்.., 55 கோடி ரூபாய் கடன் பாக்கியுள்ளதாகவும்., அதனை படக்குழு திருப்பி செலுத்தவில்லை எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஸ்டுடியோ கிரீன் நிறுவன வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உத்தரவாதம் அளித்ததை அடுத்து விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது..
இன்று காலை இப்படத்தின் எடிட்டர்.. நிஷாத் யூசுப் காலமானதை தொடர்ந்து., தற்போது படம் வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாக்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..