‘பார்ட்டி TO பாராளுமன்றம்’ கொரோனா பீதியில் இந்தியாவின் VIPக்கள்!

பாலிவுட் பாடகி கனிகா கபூர் அண்மையில் தான் லண்டன் சென்றுவிட்டு நாடு திரும்பியுள்ளார். அவர் லக்னோ விமான நிலையம் வந்து இறங்கியதும், அவருக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டதில் முதலில் கொரோனா அறிகுறி இல்லை. அதன்பின்பு 4 நாட்களுக்கு பிறகு அவருக்கு காய்ச்சல், சளி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு லக்னோவில் உள்ள ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எல்லோருக்கும் வணக்கம். கடந்த 4 நாட்களாக எனக்குக் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கின்றன. பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது நானும் எனது குடும்பமும் முழுமையான தனிமைப்படுத்தலில் இருக்கிறோம். லண்டனிலிருந்து வந்ததிலிருந்து நான் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து ஆராயும் பணிகள் தொடங்கியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு நான் வந்தபோது விமான நிலையத்தில் டெஸ்ட் எடுத்ததில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதன் பிறகுதான் தெரியவந்தது. தற்போது லேசான காய்ச்சலுடன் நலமாக இருக்கிறேன். உங்களுக்கும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கனிகா கபூர் தன்னுடைய லண்டன் பயணம் குறித்த விவரங்களை அதிகாரிகளிடமிருந்து மறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லக்னோவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த விஐபிக்கள் பார்ட்டியிலும் கலந்துகொண்டார் பாடகி கனிகா கபூர்.இதில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் பாஜக எம்.பியுமான துஷ்யந்த் சிங் உட்படப் பல முக்கிய அரசியல் பிரபலங்களும் பெரிய தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், என பல தரப்பினரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் கனிகா கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் எம்பியுமான துஷ்யந்த் சிங் மற்றும் உத்திரபிரதேச காதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் ஆகியோர் கொரோனா பீதியால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த கொரோனா பீதி பாராளுமன்றம் வரை சென்றுள்ளது.

அந்த பார்ட்டிக்கு பின்னர் துஷ்யந்த் பாராளுமன்றத்துக்கும் சென்றுள்ளார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்த அரசு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. பிரதமர் சுய தனிமை வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் பாராளுமன்ற அலுவல் பணிகள் நடைபெறுகிறது. பாராளுமன்றத்தில் துஷ்யந்த் அருகில் நான் 2.5 மணி நேரம் அமர்ந்திருந்தேன். தற்போது நான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இத்தோடு மட்டுமல்லாமல் மார்ச் 18ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எம்.பி.களுக்கு, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் கொடுத்த விருந்திலும் துஷ்யந்த் கலந்து கொண்டிருக்கிறார். இதில் மேலும் பல அரசியல் பிரபலங்களும் இதனால் இந்தியாவின் முன்னணி அரசியல் பிரபலங்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், பொது இடங்களுக்குச் சென்ற பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

What do you think?

-1 points
Upvote Downvote

தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம்!

பிரதமர் மோடியின் மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவை நீங்கள் ஆதரிப்பீர்களா?