துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி எம்.பி..!!
துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த கனிமொழி மற்றும் முரசொலி செல்வம்
வேலூர் மாவட்டம் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை அவருடைய அத்தையுமான நாடாளுமன்றகுழு தலைவர் கனிமொழி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும்., கலைஞரின் மகனுமான மு.க அழகிரியின் மகன் “துரை தயாநிதி” கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் கால் தவறி விழுந்து தலையில் பலத்த காயத்துடன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 4 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஏ வார்டில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக தொடர் பிசியோதெரபி சிகிச்சையை பெற்று வரும் துரை தாயநிதியை அழகிரியின் சகோதரியும் துரை தயாநிதியின் அத்தையுமான கனிமொழி. துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவருடன் முரசொலி செல்வமும் உடன் வந்து நலம் விசாரித்து சென்றார். தற்போது துரை தயாநிதியின் உடல் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..