அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை ஏற்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் செயல் என கபில் சிபல் காட்டமான பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பியும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரியுமா? அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்குவதுதான் பாஜகவின் திட்டம். இதற்காகத்தான் ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாஜகவின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ரவி செயல்படுத்துகிறார். ஒரு ஆளுநர் எப்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்? ஒரு அரசாங்கத்தையே நடத்துகின்றனர்.
அங்கே மத அடிப்படையில் குழப்பத்தை உருவாக்கத்தானே ஆளுநர் ரவியை அனுப்பி வைத்தீர்கள். நீங்கள்தான் குற்றவாளிகள். தமிழ்நாட்டில் இருப்பவர்களை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விஷ வித்துகளை விதைத்துள்ளது பாஜக. தமிழ்நாட்டில் மதவாத அரசியல், மதமோத அரசியல் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கபில் சிபல் கூறினார்.
இதையும் படிக்க : அதை விடுங்க.. இப்போ இது தான் முக்கியம்… 7.5 லட்சம் கோடி ஊழல்… பதில் எங்கே…? ஒரே போடாய் போட்ட அமைச்சர் உதயநிதி..!