‘கொரோனா பரவுவதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை’ மாநில அரசு அதிரடி!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு தடை என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று வரை இந்தியாவில் 73 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தற்போது 76 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் மக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், திருமண கூடங்கள், பப்புகள் உள்ளிட்டவையும் ஒரு வாரத்திற்கு மூடுமாறு முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு தடை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கவும் உத்தவிட்டுள்ளது.

What do you think?

‘இனி வணக்கம் மட்டும் தான்’ டிரம்ப் எடுத்த திடீர் முடிவு!

‘கையில் டென்னிஸ் ராக்கெட், இடுப்பில் மகன்’ வைரலாகும் சானியா மிர்சாவின் புகைப்படம்!