கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல், தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. கர்நாடகத்தில் மொத்தம், 5.31 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், மொத்தம் 224 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி முதல் எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில், காங்கிரஸ் 108 – 120 இடங்கள், பா.ஜ.க 65 – 90 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம், 24 – 34 இடங்கள் வரை பெறுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஜீ தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 103 முதல் 118 இடங்களையும், பாஜக 79 முதல் 94 இடங்களையும், மஜத 25 முதல் 33 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்தியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதள கூட்டணி 24 முதல் 32 இடங்களிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.நியூஸ் மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு படி, பா.ஜ., 79 – 94 இடங்களிலும், காங்கிரஸ் 103-118 இடங்களிலும் ம.ஜ.த., 25-33 இடங்களிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.