“கர்ணவேத சடங்கு..” காது குத்துவது ஏன் தெரியுமா..?
ஆண் குழந்தைகள் என்றும் பெண் குழந்தைகள் என்றும் வித்தியாசம் பார்க்காமல் நம் சமூகத்தில் காது குத்தப்படுவது ஒரு சடங்காகவே உள்ளது.
இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கத்தான் சிறு வயதிலேயே காது குத்தப்படுகிறது.
காது என்பது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக விளங்குவதால் காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது.
காது குத்துவதன் மூலம் மூளையின் செயல்திறன் தூண்டப்படுகிறது.
காது மடல்களில் துளையிட்டு காதணி போடும்பொழுது அதில் இருக்கும் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு காது கேட்கும் திறன் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
காதுகளில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள் நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதை நாம் எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை பற்றி ஒரு சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க…
“கர்ணவேத சடங்கு” என்று அழைக்கப்படும் காதுகுத்து விழாவை நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும்.
பழங்கால நம்பிக்கைகளின்படி குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் இது செய்யப்பட வேண்டும். அப்படியில்லையெனில் ஒற்றைப்படை ஆண்டில் அதாவது மூன்று, ஐந்து அல்லது ஏழாவது வயதில் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
காது குத்தும்போது ஆண் பிள்ளையாக இருந்தால் முதலில் வலது காதையும் பின்னர் இடது காதையும் குத்துவது வழக்கம். பெண் குழந்தையாக இருந்தால் முதலில் இடது காதையும் பிறகு வலது காதையும் துளைத்து நகைகள் அணிவிக்கப்படும்.
காது குத்துவது என்பது அழகுக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும்தான்.
காது குத்துவது மட்டுமல்லாமல், காதணிகள் அணிந்து கொள்வதும் அவசியம். இதனால் நம் உடல் முழுவதும் ஆற்றல் பரவும் என்று கூறப்படுகிறது.