தீபாவளி முன்னிட்டு கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகி நல்ல விமரசணங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத நிலையில் சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரின்ஸ் படத்தைவிட நல்ல வரவேற்பை பெற்றது சர்தார்.
.இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற சர்தார் படத்தின் வெற்றிவிழாவில் சர்தார் 2 குறித்து அப்டேட்டை வெளியீட்டு உள்ளனர். நடிகர் கார்த்தி, இயக்குனர் மித்ரன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட அந்த விழாவில் ரசிகர்களின் ஆதரவை தொடந்து சர்தார் 2 வரவுள்ளதாக கூறி, ஒரு வீடியோ காட்சி மூலம் அறிவித்துள்ளனர்.
ஏற்கவே கார்த்தியிடம் பொன்னியின் செல்வன் 2, கைதி 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என்று அடுத்த அடுத்த பாகங்கள் வரிசையில் இருக்கும் நிலையில் இப்பொது சர்தார் 2 சேர்ந்துள்ளதாக ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.