‘மரணத்திலும் ஒற்றுமையை கடைபிடித்த தோழர்கள்’ தொண்டர்களை நெகிழ்ச்சியடையவைக்கும் தகவல்!

திமுகவின் பொதுச்செயலாளர், பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அன்பழகன் திராவிட கொள்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டவர். அன்பழகனுக்கும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே கிட்டத்தட்ட 75 ஆண்டுகால நட்பு இருந்துள்ளது.

இருவரும் ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்வர். இருவரின் பிள்ளைகளும் பெரியப்பா, சித்தப்பா என்று முறை வைத்து தான் கூப்பிடுவார்கள். இவர்களின் நட்பை பலரும் புகழ்ந்து பேசியுள்ளனர். வாழும் வரை நட்புக்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்த இருவரும் மரணத்திலும் ஒற்றுமையை கடைபிடித்து தொண்டர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.

ஆம், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கருணாநிதி உயிரிழந்தார். அதேபோல் க.அன்பழகனும் மார்ச் 7ம் தேதி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இரண்டு பேரும் 7ம் தேதியிலேயே உயிரிழந்து மரணத்திலும் நாங்கள் ஒற்றுமையான நண்பர்கள் தான் என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டியுள்ளனர்.

மேலும் அன்பழகன், கருணாநிதியை விட 2 ஆண்டுகள் மூத்தவர். அதேபோல் கருணாநிதி உயிரிழந்து 2 ஆண்டுகள் கழித்து அன்பழகனும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘நடிகர் அஜித்தின் கையெழுத்துடன் FaceBook-ல் வெளியான அறிக்கை’ ரசிகர்கள் ஏமாற்றம்!

பேராசிரியர் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன் – டிடிவி டிவிட்