கோவிலே எனக்கு வேண்டாம் என சொல்லிய காட்டு செல்லியம்மன்..!
பொதுவாக அம்மன்களுக்கு பெரிய பெரிய ஆலயங்கள் மற்றும் சிறு கோவிலாவது இருப்பதை நாம் பார்த்து இருப்போம். ஆனால் இந்த அம்மன் மட்டும் எனக்கு கோவிலே வேண்டாம் என சொல்லியுள்ளார்.., கோவிலே வேண்டாம் என சொல்லியதற்கான காரணம் என்ன..? நினைத்த வேண்டுதல் நிறைவேற்றி தர படுமா என பார்க்கலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருளர் இன மக்கள் காட்டிற்கு நடுவே இருந்த ஒரு புற்றில் பாம்பு எடுப்பதற்காக.., புற்றில் கை விட்டுள்ளார், அப்பொழுது புற்றில் கல் ஒன்று அடிபட்டுள்ளது.., ஒரு வேலை ஏதாவது தங்க சிலையாக இருக்குமோ என எண்ணிய இருளர்.., உடன் இருந்த மற்ற மக்களை கூப்பிட்டு புற்றை உடைத்துள்ளார்.
அப்பொழுது அம்மன் சிலை இருந்துள்ளது.., பின் இருளர் இன மக்கள் அம்மனின் முன் விழுந்து வணங்கியுள்ளனர், அப்பொழுது அவருக்கு பின்னே இருந்து ஒரு ஒளியும்.., சத்தமும் கேட்டுள்ளது.., இந்த காட்டை விட்டு ஊருக்குள் எனக்கு ஆலையம் எழுப்பும் படியும், ஒரு அடிக்கு ஒரு மிருகத்தை காவு கொடுக்கும் படியும் சத்தம் வந்துள்ளது.’
இருளர் மக்களும் அம்மனின் ஆசைக்கு இணங்க அவர்களை பல்லக்கில் தூக்கி.., அவர் கேட்டது போலவே ஆடு, கோழி என காவு கொடுத்து சென்றுள்ளனர். சில தூரம் சென்ற பின் காவு கொடுப்பதற்கு எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. அம்மனின் ஆசையை நிறைவேற்ற நினைத்த இருளர் இன மக்கள்.., அம்மனிடம் சென்று முறையிட்டுள்ளனர்.
அம்மா நீங்கள் கேட்டது போலவே நாங்கள் காவு கொடுத்து கொண்டே வந்தோம் ஆனால் தற்போது கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை.., எனவே நாங்கள் எங்களை காவு கொடுத்து கொள்கிறோம் என சொல்ல..,
மீண்டும் ஒரு குரல் ஒளித்துள்ளது.., எனக்கு கோழி மற்றும் ஆட்டை காவு கொடுப்பதற்கே உங்களால் முடியவில்லை நீங்கள் கஷ்ட படுகிறீர்கள்.., எனக்கு ஆலையம் வேற எழுப்ப உங்களால் முடியாது.., நீங்கள் சிரம பட வேண்டாம்.., எனக்கு இந்த காடே போதும்.
இங்கு என்னை தேடி வரும் பக்தர்களுக்கு நான் காட்சி கொடுக்கிறேன்.., என்னிடம் வைக்கும் நியாமான வேண்டுதலையும் நிரைவேற்றி தருகிறேன் என அம்மன் குரல் ஒலித்தவுடன் மீண்டும் அம்மன் அந்த காட்டிலேயே சென்று அமர்ந்து விட்டார்.
அன்று முதல் இன்று வரை அவர் “காட்டு செல்லியம்மன்” என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலுக்கு சென்று நாம் வைக்கும் வேண்டுதல் அடுத்த முறை செல்வதற்குள் நிறைவேற்றி தரப்படுவதாக அந்த ஊர் மக்கள் சொல்லுகின்றனர்.
மேலும் நினைத்த செயல் நிரைவேறி விட்டால்.., அங்கு உள்ள குளத்தில் உள்ள தண்ணீரில் தான் பொங்கல் வைக்க வேண்டுமாம்.., அந்த தண்ணீரை எடுத்து வந்து அங்கு அருகில் உள்ள அரச மரத்தின் அடியில் இருக்கும் நாக தேவதைகள் மேல் ஊற்றி மஞ்சள் குங்குமம் இட்டு, நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் கேட்ட வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே செங்கரை ஊராட்சியில் அமைந்துள்ளது.
முக்கியமாக திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்கள்.., இத்திருத்தலத்திற்கு சென்று வேண்டி கொண்டு.., திருமணம் ஆகும் பொழுது கட்டி இருந்த கூரை புடவையின் நுனியை கிழித்து மரத்தின் மேல் கட்டினால்.., இரண்டே மாதித்தல் கரு தரித்திடும் என்பது ஐதீகம்.
மேலும் திருமணம் ஆகாதவர்கள் தாலி கயிறை மரத்தில் கட்டினால் நாற்பத்தைந்து நாட்களுக்கும் திருமணம் ஆகி விடும் என்பது ஐதீகம்.
முக்கிய குறிப்பு மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் இருக்க அனுமதியில்லை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..