கவிதாவுக்கு மறுக்கப்பட்ட ஜாமீன்..!! அடுத்தகட்ட நடவடிக்கை..?
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடா்பாக தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை, டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்பட 15 பேரை கைது செய்தது.
இந்த வழக்கில் கடந்த 15ஆம் தேதி கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனிடையே அவரது அமலாக்கத் துறை காவல் முடிவடைந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா ஆஜா்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..