சுவையான வாழைப்பழ அடை… செய்வது எப்படி..!
வாழைப்பழம்-5
சர்க்கரை-1கப்.
அரிசி மாவு-1/2 கப்.
கோதுமை மாவு-1 கப்.
துருவிய தேங்காய்-1/4கப்.
உப்பு- தேவையான அளவு.
ஏலக்காய் தூள்-சிறிதளவு.
நெய்- தேவையான அளவு.
5 வாழைப்பழத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மசித்த வாழைப்பழத்துடன் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, ஏலக்காய் பொடி, சர்க்கரை, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
வாழை இலையில் சிறிது நெய் விட்டு தடவி பிசைந்து வைத்திருக்கும் வாழைப்பழ மாவில் கொஞ்சம் எடுத்து இலையில் வைத்து தட்டி அதனை மடித்து விடவும்.
இட்லி பாத்திரத்தில் வாழை இலையை அப்படியே வைத்து 20 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வாழை இலை அடை தயார்.