தினமும் சருமம் பொலிவுடன் இருக்க..!! ஒரு ரகசியம்
ஃபேஷ்வாஷ் : தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுவதும் முகத்தை ஃப்ரெஷ் ஆக வைக்க உதவுகிறது.
காலை எழுந்தவுடன் ஒரு சிலர் ரோஸ் வாட்டர் பயன் படுத்துவது வழக்கம். ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதும், வெறும் தண்ணீரில் முகம் கழுவுவதும் அவரவர் விருப்பம்.
உடற்பயிற்சி : நன்கு உடல் வியர்க்கும் படி யோக, அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதனால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறும்.
கழுத்து உடற் பயிற்ச்சி : முகத்தில் விழும் சுருக்கத்தை விட கழுத்துப் பகுதியில் தான், அதிக சுருக்கம் விழும்.
தினமும் காலை 15 ல் இருந்து 20 நிமிடம் வரை, கழுத்து உடற்பயிற்சி செய்தால். விரைவில் சுருக்கம் விழாது.
முகம் புத்துணர்ச்சி : வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலும்பிச்சை பழச்சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்தால், முகம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி