கேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தளிபரம்பா அருகே சொருக்காலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கான பிரதான சாலையாக அரசு பேருந்து, உணவு, காய்கறி பொருட்கள் ஏற்றி செல்லும் வண்டிகள் நாள் முழுவதும் வந்து சென்றுக்கொண்டிருக்கும்.
எப்போதும் வாகன போக்கு வரத்து உள்ள இந்த சாலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன் நூலிழையில் தப்பித்துள்ளான்.
அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் சாலையை கடக்க முயலும் போது பைக்கில் மோதினான். பைக்கில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதால் அடுத்தடுத்து தொடர்ந்து வரும் பைக் மற்றும் பேருந்தின் நடுவே வேகமாக நுழைந்து சாலையின் மறுபக்கம் விழுகிறான்.
இதன் மூலம், பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து அவன் நூல் இழையில் தப்பித்தான். பின் எழுந்து நின்று செய்வதறியாது கைகால்களை துடைத்தபடி நிற்கிறான். ஆனால் அவனது மிதிவண்டி பேருந்தில் சிக்கி சுக்கு நூறானது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கிறது.