‘2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா?’ மூடப்படும் அரசு அலுவலகங்கள்!

கேரளாவில் 2 எம்.எல்.ஏக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதுவரை 231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் 2வது இடத்தில இருப்பது கேரளா தான். அங்கு நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 2 எம்.எல்.ஏ-க்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 5 பேர் எர்ணாகுளம் மாவட்டத்திலும், 6 பேர் காசர்கோட்டிலும் மற்றும் ஒருவர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

காசர்கோட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் கோழிக்கோடு, காசர்கோடு எனப் பல இடங்களுக்குச் சென்றுள்ளார். மேலும் கிளப்புகள் , வீட்டு விசேஷம் என பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இதனால் காசர்கோடு மாவட்டத்தை அதிதீவிரமாக கண்காணிக்கின்றோம். அந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது. வழிபாட்டு தளங்கள் மற்றும் கிளப்புகள் 2 வார காலத்திற்கு அடைக்கப்படும். அங்கு கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். வரும் மார்ச் 22-ம் தேதி கேரளாவில் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது. மாநிலம் முழுவதும் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

What do you think?

டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

தோனியின் எதிர்காலம் குறித்து கவாஸ்கர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!