முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்தான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்குகள் குறித்தான விசாரணைக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வரவிருந்த நிலையில், தமிழக அரசு புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளது அதனை சரிசெய்வதற்கும் அந்த பணிகளை தொடங்குவதற்கும் கேரளா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், முல்லை பெரியாறு அணையின் பராமரிப்புக்கு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கேரளா அரசு ஒத்துழைப்பு தருவதில்லை, மேலும் பராமரிப்பு பணிகளுக்காக 15 மரங்களை வெட்டுவதற்கும் சாலை அமைப்பதற்கும் கேரளா ஒத்துழைக்கவில்லை மேலும் இது தொடர்பாக பலமுறை அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவிடம் கூறியும் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சாலை அமைப்பதற்கும் கேரளா அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.