கேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஸ்வநாததாஸ் நகர். இந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் போதிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு மற்றும் வாறுகால் வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தங்கள் பகுதிக்கு போதிய அடிப்படை வசதி செய்து தரக் கூறி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராம பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட சாட்டையடி வகுப்பை சார்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இவர்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் அரசு இலவச தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரில் உள்ள சி.எம்.சி கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, சித்தூர், பாகாயம், உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை வளாகங்களிலும் மரம் நடும் முயற்சி தொடங்கப்பட உள்ளது. உலகளாவிய காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்த்து. இத்திட்டம் மூலமாக பத்து லட்சம் மரங்களை நடுவதை இலக்காக கொண்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் ஜி.வி. செல்வம் மற்றும் சி.எம்.சி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் உள்ளிட்டோரும் வனத்துறை மற்றும் வேளாண்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள், நிகழ்வில் கலந்துகொண்டனர்
திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் பழமை வாய்ந்த உத்தமசோழர் கட்டிய பெருமாநல்லூர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதி கேசவ பெருமாள் கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டன..
திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சரவணராஜ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து .அரியலூர் நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்தில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்மேலும் ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியும் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..