ஜேபி.நட்டாவுக்கு குஷ்பூ எழுதிய கடிதம்..!! அதிர்ச்சியில் பாஜக..!!
நடிகையாக இருந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்த குஷ்பு. கடந்த தேர்தலில் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய செயற்குழு கமிட்டி உறுப்பினராக உள்ள குஷ்பூ. தற்போது லோக்சபா தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பாஜகவிற்கு தேர்தல் பிரசாரத்தை தான் நிறுத்தி கொள்ளபோவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு கடிதமும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் எழுதியது.
நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சனைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன்.
2019ல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு வால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துரத்தி கொண்டே இருக்கிறது. அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்தேன் ஆனால் இதுவரை என் உடல்நலம் சரியாகவில்லை.
எனவே இத்தகைய சூழலில் நான் தொடர் பிரசாரம் செய்தால் என் உடல்நிலை மோசமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு பாஜகவின் தொண்டராகவும், பிரதமர் மோடியை பின்பற்றும் நபராகவும் கட்சியின் போர்வீரர் என்ற முறையில், வலிகளை உள்ளே வைத்து கொண்டு பிரசாரம் செய்தேன். அதனால் தானோ என்னவோ தற்போது நிலைமை மோசமாகிவிட்டது. எனவே இனி வரும் நாட்களில் என்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது.
இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் உழைக்க முடியவில்லை என்ற வருத்தம் அதிகம் இருந்தாலும், எனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் பாஜகவின் கொள்கைகளை பரப்பி வாக்கு சேகரிப்பேன் என கடிதம் எழுதியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..