இதுவரை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்த பொல்லார்ட்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரன் பொல்லார்ட் 500 டி20 போட்டிகளில் விளையாடி புதிய சாதனையை படைந்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

kieron pollardக்கான பட முடிவுகள்

அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பொல்லார்ட்

இது கிரன் பொல்லார்ட் விளையாடும் 500வது டி20 போட்டியாகும். இதன் மூலம் 500 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பொல்லார்ட். இந்த சாதனையை பாராட்டி அவருக்கு புதிய ஜெர்ஸி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

What do you think?

கொரோனாவை இந்தியாவுக்கு வரவேற்ற பிரபல நடிகை – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

‘மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பு, ஒரு விஷயத்தில் ஏமாற்றம் தான்’ ரஜினிகாந்த்