அசந்த நேரத்தில் தங்க நகையை ஆட்டை போட்ட கில்லாடி பெண்…!! போலீசில் சிக்கியது எப்படி..?
நாட்றம்பள்ளி அருகே நகை கடையின் உரிமையாளரின் மகனை ஏமாற்றி 21 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்து சென்ற பெண் கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதிதெரு பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் வினாயகம் (52) இவர் நாட்றம்பள்ளி அடுத்த சந்தை தெரு பகுதியில் விநாயகம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி விநாயகம் தனது மகனான சச்சின் (22) என்பவரை கடையில் விட்டு திருப்பத்தூருக்கு தனது சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது அந்த கடைக்கு வந்து பெண் ஒருவர் தனக்கு கம்பல் வேண்டும் நகைகளை காண்பிக்கமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய சச்சின் கடையிலிருந்த நகைகளை எடுத்து மேசையின் மீது வைத்து நகைகளை காண்பித்துள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மேசையின் டப்பாவில் இருந்த 21சவரன் தங்க நகைகளை எடுத்து தனது புடவையில் வைத்துக்கொண்டு அந்த பெண் அங்கிருந்து சென்றார்.
நகை காணாமல் போய் இருப்பதை லேட்டாக உணர்ந்த சச்சின் தனது தந்தைக்குக் கூறியுள்ளார் அப்போது கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நூதனமாக ஏமாற்றி நகைகளை கொள்ளை அடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவம் குறித்து விநாயகம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கூட்டு சாலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்தப் பெண் பேருந்துக்காக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் அற்புதராஜ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட போலீஸ் குழுவினர் அந்தப் பெண்ணை பிடித்து நாட்றம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மனைவி கவிதா (40) என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 21 சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்து அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..