30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா..! முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு..! வெளியிட்ட அறிக்கை..!
சென்னை கிண்டியில் 30 கோடியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு-2024 அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
சென்னையின் மைய பகுதியில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள் உள்ளன. ஒன்பது வகையான, 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவை இனங்கள் உள்ளன. சென்னை மக்கள் மற்றும் சுற்றுலா வருவோர், இந்த பூங்காவில் உலவும் உயிரினங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பூங்காவை மேம்படுத்த, கடந்த ஆண்டு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அரசு ஒதுக்கிய 20 கோடி ரூபாய் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சி.எஸ்.ஐ.ஆர்., நிதி 10 கோடி ரூபாய் என மொத்தம் 30 கோடி ரூபாயில் பணி துவங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இப்பூங்கா வந்தது. இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
#கிண்டி_சிறுவர்_பூங்கா pic.twitter.com/UOl2PZZSjo
— M.K.Stalin (@mkstalin) August 3, 2024
இப்பூங்கா திறப்பு விழாவின்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.
மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில், கிண்டி சிறுவர் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திறப்பு விழாவில், வனவிலங்குகளை மீட்கவும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கவும், அனைத்து நிலப்பகுதிகளிலும் செல்லும் 9 நவீன வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின், கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.
தமிழகத்திலேயே முதன் முறையாக 2,800 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்கள் அறிந்துகொள்ளும் வகையிலான எல்இடி மின் திரைகள், நூலகம், நிர்வாக கட்டடம், அழகிய நுழைவுவாயில், நீருற்றுகள், செல்ஃபி பாயின்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மழை நீர் வடிகால் வசதிகள், நடைபாதைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளுடன் கூடிய பூங்கா கிண்டி இயற்கை சிறுவர் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..